வெளிநாடுகளிலெல்லாம் ஒரு 50 வருடத்திற்கு முந்தைய ஒரு மண் குட்டை கண்டாலும் உடனே அதனை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்து பராமரிக்க ஆரம்பித்துவிடுவார். அதனால்தான் வெளிநாடுகளில் சுற்றுலா தளங்கள் படம் போடுகின்றன!
ஆனால் நம் ஊரிலோ?...
200 வருடங்கள் பெருமை வாய்ந்த பகுதிகளைக்கூட பராமரிக்காமல் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன... அப்படிப்பட்ட பகுதிகளில் ஒன்றுதான் இந்த சங்ககிரி மலை.
சங்ககிரி கோட்டை சேலத்தில் உள்ள முக்கிய வரலாற்று இடமாகும். சங்ககிரி மலையில் இது கட்டப்பட்டுள்ளது. அனால் பராமரிப்பு இல்லாததால் வரலாற்று புகழ் வாய்ந்த இக்கோட்டை தற்பொழுது சிதிலமடைந்துள்ளது. இக்கோட்டையில்தான் கொங்குநாட்டு சிங்கமான தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டார் என்று வரலாறு கூறுகிறது. இதை ஆட்சி செய்தவரும் அவரே. கோட்டைக்கு 10 சுற்று சுவர்கள் உள்ளன.
இப்பகுதியில் அதிகப்படியான மூலிகைகளும் இருப்பதாக கூறப்படுகிறது. அதை எண்ணித்தான் மூலிகை ஆய்வுக்காக நான் அம்மலைக்கு சென்றேன். அப்பொழுதுதான் தெரிந்தது மூலிகையை விட சிறப்புவாய்ந்த பொருள் அக்கோட்டை என்பது...உடனே நான் மூலிகை தகவல் சேகரிப்பதை விட்டு அக்கோட்டை பற்றிய தகவல்களை சேகரித்தேன்.
ஆனால் நான் அப்பொழுது அதற்கு தகுந்த உபகரணங்களுடன் செல்லாததால் சரியனவகையில் கோட்டையை இங்கு பதிவிட இயலவில்லை. என்னால் கோட்டையின் 20 சதவீத பகுதிகளைத்தான், உண்மையை சொல்லவேண்டுமானால் கோட்டையின் சுற்று சுவர்களை மட்டும்தான் பார்க்க முடிந்தது. ஆனால் மற்றுமொரு மறுபதிவில் இதன் முழு வெளியீடும் கண்டிப்பாக உண்டு...
உங்களுக்காக எனது கண்ணில் பட்ட காட்சிகள் உங்கள் முன்னால்....
பிரம்மாண்ட நுழைவு வாயில்
இதென்ன நுழை வாயிலா? இல்லை கற்கோவிலா?
மிக நீளமான கற்களைத்தான் சுவர்களுக்கு பயன்படுத்தியுள்ளனர்
பாறையை நேர்த்தியாக செதுக்கி வடிவமைக்கப்பட்டுள்ள சிலைகள்
பெரிய நுழைவாயிலை ஒட்டியுள்ள சிறிய வழி ( பதுங்கு பாசறைய என்னவென்று அறிவதற்கில்லை கண்டிப்பாக மறு பதிவில் உண்டு)
வெறும் கற்ககளால் மட்டும் தாங்கப்பட்டுள்ள மேற்கூரை
புதுப்பிக்கப்பட்டுள்ள முன் மண்டபம்
குளத்தின் படித்துறை
சிதைந்த நிலையில் உள்ள சிறப்புவாய்ந்த பெரிய குளக்கரை
20 அடிக்கு மிகுந்த மதில் சுவர். இது மலை உச்சியில் உள்ள கோட்டைவரை நீண்டு உள்ளது.
உருது மொழியில் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்கள்
சிதைந்த நிலையில் நந்தி சிலை
சிதைந்த நிலையில் உள்ள கோவில்
நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த மழைநீர் வடிகால் முறை
இம்மலையில் மூலிகைகள் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது
புதுப்பிக்கப்பட்டுள்ள கோவில்
நீர்கேணி
பாறையிலேயே உருவாக்கப்பட்டுள்ள படிகள்
உங்களுக்கு தெரிகிறதா? சுவற்றின் நிறத்திலேயே உள்ள ஓணான்
மலைமேலிருந்து பார்க்கும்போது சங்ககிரியின் அழகு
படை வீரர்கள் ஓய்வெடுக்கவும் அல்லது உணவு ஆயுதங்களை சேமிக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்
மலைமேல் உள்ள கோட்டைக்கு செல்லும்போது இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள அக்கால நிழற்குடை
இதுதான் செல்லாண்டியம்மன் கோவிலாக இருக்கும்
முழுவதும் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கூடம் போன்ற பகுதி
இதன் வடிவமைப்பை பார்க்கும்போது பொர்க்களஞ்சியம் போன்றுள்ளது
சிதைந்த நிலையில் கோட்டையின் உள்பகுதி
இம்மலையில் மூலிகைகளும் நிறைந்திருப்பதாலும் இத்தகைய சிறப்பு வாய்ந்த கற்களாலேயே கட்டப்பட்ட பெரும் சுற்று சுவர்களைக்கொண்ட மலைக்கோட்டையை பாதுகாப்பதில் நமக்கும் பெரும் பங்கு உண்டு...ஆகையால் இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு போவதற்காகவே முன்னோட்டமாக இப்பதிவை வெளியிட்டுள்ளேன்.
இதற்கான கருத்துகளையும் உங்களது வோட்டினையும் நிறைய அளித்து எங்களது செயல்பாட்டிற்கான ஆதரவினை அளியுங்கள். அதற்காக கீழே உள்ள Indli, தமிழ் 10 போன்றவற்றை கிளிக் செய்யவும். நன்றி.
எனக்கு பதிவு எழுதும் ஆர்வம் இயல்பாகவே இருந்தாலும் அதனை தெளிவுற் செய்வதற்கு உதவியது வந்தேமாதரம் சசிகுமார் அவர்களின் பதிவுகளே. அவருக்கு நன்றிகள்.















































































